பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியப் போட்டி: பங்கேற்க அழைப்பு !

தமிழ்நாடு வனத்துறை மூலம் வன உயிரின வார விழாவையொட்டி 2016 தஞ்சாவூர் வனக்கோட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் 11.09.2016 அன்று தஞ்சாவூர் சரபோஜி அரசுக்கல்லூரியில் நடைபெறுகின்றது.

வன உயிரின வார விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ந.சதீஷ் (முழு கூடுதல் பொறுப்பு) அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் 11.09.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் சரபோஜி கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளன.

தலைப்புகள்:
ஓவியப்போட்டிகள்: 
யூ.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை - இயற்கை காட்சிகள்
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு - வன உயிரினங்கள்
11, 12 மற்றும் கல்லூரி - சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் - வனமும், வளமும்

பேச்சுப்போட்டி:
9ம் வகுப்பு முதல் கல்லூரி வரை
1) ஆங்கில பேச்சுப் போட்டி– “Significance of Wildlife Conservation in today’s context”
2) தமிழ் பேச்சுப் போட்டி -  “இன்றய கால சூழலில் வன உயிரினப் பாதுகாப்பின் முக்கியத்துவம்” (பேச வேண்டிய நேரம் 3 நிமிடம்)

ஆர்வமும், தகுதியும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டியில் வெற்ற பெறுவோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ந.சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

إرسال تعليق

0 تعليقات