நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 360 காசுகளாக நிர்ணயம்



நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 355 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 360 காசுகளாக உயர்ந்து உள்ளது.பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:– சென்னை–365, ஐதராபாத்–345, விஜயவாடா, தனுகு–363, பார்வாலா–354, மும்பை–390, மைசூரு–358, பெங்களூரு–355, கொல்கத்தா–412, டெல்லி–353.முட்டைக்கோழி கிலோ ரூ.74–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.77–ஆக உயர்ந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.65–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்

إرسال تعليق

0 تعليقات