குவைத்திலிருந்து ஜனவரி-2 அதிகாலை முதல் விமான சேவை மீண்டும் துவங்கும்.

குவைத்திலிருந்து வணிக(பயணிகள்) விமானங்களின் சேவைகள் ஜனவரி- 2ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று குவைத் சிவில் ஏவியேஷன்(DGCA) அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் முன்னர் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் குவைத்திறகு நேரடியாக பயணம் செய்வதற்கான அனுமதி வழங்குவது உள்ளிட்ட விமானப் பயணம் தொடர்பான முடிவுகள் நாட்டின் சுகாதார நிலைக்கு ஏற்ப மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா பரவல் அறிக்கைகளைத் தொடர்ந்து குவைத் தனது நிலம், வான் மற்றும் கடற்படை எல்லைகளை  டிசம்பர் 21 முதல் ஜனவரி 1 வரை மூட முடிவு செய்துள்ளது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் ஜனவரி 2 முதல் குவைத்தின் எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்தது  குறிப்பிடத்தக்கது. 

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

إرسال تعليق

0 تعليقات