தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை தொடரும் -மத்திய அரசு.

பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரிட்டன் – இந்தியா இடையிலான விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கிவருதால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன.

இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் லண்டன் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வந்தாலும் தொடர் விழிப்புணர்வு தேவை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

إرسال تعليق

0 تعليقات