புதிய மாவட்டமான மயிலாடுதுறை…. அதிகாரபூர்வ அறிவிப்பு…

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகி இருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு, அதற்கான நிர்வாக பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து துவங்கி வைத்துள்ளார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்டு இருந்தது. நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என தெரிவித்து, அதற்கான சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டங்களில் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. அதற்கான பணிகளை தற்போது காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

إرسال تعليق

0 تعليقات