கோபாலபட்டிணத்தில் பூட்டிய வீட்டில் 750 சவரன் நகை கொள்ளை - திடீர் திருப்பம்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீமிசலை அடுத்த கோபாலபட்டினம் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஜகுபர் சாதிக் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு பீரோக்கள், அலமாரி, பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 750 பவுன் நகைகளை நேற்று முன்தினம் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேற்று நேரில் சென்று கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

750 சவரன் நகை கொள்ளை - திடீர் திருப்பம்.

750 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியில் பின்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தனிப்படை போலீசார் தங்க நகைகளை மீட்டு எடைகளை சரிபார்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகள் யாரும் இதுவரை சிக்கவில்லை. 



-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات