நம்மாழ்வார் நினைவு தினம், பாரம்பரிய இயற்கை விவசாய திருவிழா.

தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த ஓட்டங்காடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் திடலில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒட்டங்காடு, நடுவிக்குறிச்சி,  நவக்கொல்லைக்காடு, ஊரணிபுரம், உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த  100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட, பாரம்பரிய இயற்கை இயற்கை விவசாய திருவிழா  நடைபெற்றது. 

இதையொட்டி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், 
அடிமுறை குத்து வரிசை, வேல் கம்பு, ஒற்றை வால், இரட்டை வால், சுருள் வாள், மான் கொம்பு.
உள்ளிட்ட தற்காப்புக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெற்றது. 

இயற்கை விவசாயத்தைப் பற்றி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் சிறப்பாக பேசியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், புஷ்கரம் வேளாண்  அறிவியல் கல்லூரியின் மாணவர்கள், கலந்து கொண்டனர். முன்னதாக, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات