கொரோனா பரவல் எதிரொலி: கண்காணிப்பு வளையத்திற்குள் 4 விமான நிலையங்கள்

கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதுவகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விமான நிலையங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் நான்கு விமான நிலையங்கள் உள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் வெளிநாட்டில் இருநது வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தொடங்க உள்ள நிலையில், விமான பயணிகளுக்குச் செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات