நாளை குப்பத்தேவன் கிராமத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெருமகளூர் சரகம் குப்பத்தேவன் கிராமத்தில் உள்ள அழியா மொழி அம்மன் கோவில் திடல் (கணேசபுரம்) பகுதியில் நாளை டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. , இதில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பேராவூரணி வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات