செந்தலை ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய MLA அசோக்குமார்

சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியம் செந்தலைவயல் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் ரூ.59.00 இலட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்க்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினர் நா.அசோக்குமார், அடிக்கல் நாட்டினார் விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் சேதுராாசத்திரம் வடக்கு
மு.கி.முத்துமாணிக்கம், ஒன்றிய கழக செயலாளர் சேதுபாவாசத்திரம் தெற்கு வை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினரிடம் ஊர் பொதுமக்கள் தங்களின் பொது கோரிக்கைகளை முன்வைத்தனர் அதனை உடனடியாக செய்து தருவதாக கூறி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் நிகழ்சியில் ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், கிளை கழக செயலாளர், ஜமாத்தார்கள், வார்டு உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் கிராமத்தார்கள் என பலர் கலந்துகொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات