உங்கள் போனுக்கு ஒரு `Emergency alert ` மெசேஜ் வந்துச்சா... அது என்ன தெரியுமா?

Emergency Alert Message: இந்தியா முழுவதும் உள்ள பல ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்திய அரசு தரப்பில் ஒரு எச்சரிக்கை செய்தி வந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை இதில் முழுமையாக காணலாம்.

நாடு முழுவதும் உள்ள பல மொபைல் ஃபோன் பயனர்களுக்கு, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ஒலிபரப்பு அமைப்பில் இருந்து திடீர் 'எச்சரிசை ஒலியுடன் மாதிரி சோதனைச் செய்தி' அனுப்பப்பட்டுள்ளது. இதனால், பலரும் வியப்படைந்துள்ளனர்.  மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் அனுப்பப்பட்ட அந்த செய்தியில், அவசர காலங்களில் மேம்பட்ட பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மெசேஜ் இருப்பதாக அதில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,"இது மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி ஆகும். உங்கள் பக்கம் இருந்து எந்த எதிர்வினையும் தேவையில்லை என்பதால் இந்த செய்தியை புறக்கணிக்கவும். இந்த செய்தி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா எமர்ஜென்சி அலர்ட் சிஸ்டம். இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், நிலநடுக்கம், சுனாமி மற்றும் திடீர் வெள்ளம் போன்ற
அவசர காலங்களில் சரியான நேரத்தில் விழிப்பூட்டல்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.




-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات