தமிழக அரசு குரூப்-4 தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு !

இளைஞர்கள் எந்த அறிவிப்பிற்காக காத்திருந்தார்களோ அந்த பொண்ணானஅறிவிப்பு இதோ வந்துவிட்டது!

தமிழக அரசின் இளைநிலை உதவியாளர் பணிக்கான 5451 காலிபணியிடங்களை கொண்ட குருப்4 தேர்விற்கான அறிவிப்பு வந்துவிட்டது...

தேர்வு நாள் நவம்பர் /6/ 2016

விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 8 2016 

விண்ணபிக்கும் இணையம் www.tnpsc.gov.in 

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை

சம்பளம் 15000-20200

பாடத்திட்டம் : மொத்தம் 200 கேள்வி (தமிழ் (அ)ஆங்கிலம்100, கணிதம் 25 பொது அறிவு 75) அனைத்து கேள்விகளும் 6 வகுப்பிலிருந்து 10 வகுப்புவரை உள்ள பள்ளி புத்தகத் தரத்திலே அமையும் கூடுதலாக நடப்பு நிகழ்வுகள் மட்டும் செய்தி தாள்களிலிருந்து... ஆதலால்  பயப்பட வேண்டிய அவசியமில்லை..

இன்றிலிருந்து அடுத்த மூன்று மாதம் கடுமையான முயற்சி செய்தால் தரமான பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்தால் கண்டிப்பாக அரசு அதிகாரி ஆவது உறுதி... 

ஏனோ தானோ என்று படித்தால் படித்து கொண்டே இருக்க வேண்டிய தான்... 

பத்தாம் வகுப்பு தரம் தானே பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து விடாதீர் இத்தேர்விற்கான போட்டியாளர் மட்டும் குறைந்தது 8முதல் 10லட்சம் பேர் வரை... 

தனியார் துறையில் சிக்கி கனவை இழந்து படித்து முடித்து வேலை இல்லாமல் வாழ்வை இழந்து பரிதவிக்கும் இளைஞர்கள் இப்பொண்ணான வாய்ப்பை பயன்படுத்தி அரசு அதிகாரியாக வளம் வாருங்கள்..வாழ்த்துக்கள் 

குறிப்பு: (ஊதிய கமிஷன் தாக்களானவுடன் இப்பணிக்கு சம்பளம் குறைந்தபட்சம் 25000 முதல் ஆரம்பம் ஆவது கவணிக்கதக்கது.. அதே போல் பதவி உயர்வின் மூலம் தாசில்தார் ஆர்ஐ போன்ற குருப்2 பணிகள் பலவற்றிற்க்கு அடுத்த பத்து ஆண்டுகளில் இப்பணியின் மூலம் செல்லவது தனிச்சிறப்பானது)

கருத்துரையிடுக

0 கருத்துகள்