பேராவூரணி தொகுதியை 54 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய தி.மு.க.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதியில் கடந்த 1967 - ம் ஆண்டு தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த தொகுதி தொடங்கப்பட்ட உடன் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன்பிறகு தி.மு.க. போட்டியிட சில நேரங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் போட்டியிட்ட தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. தற்போது 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி பெற்று பேராவூரணி தொகுதியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பட்டுக்கோட்டை தொகுதியில் கடந்த 1996 - ம் ஆண்டு தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்றது அதன்பிறகு கூட்டணி கட்சிகளுக்கு பட்டுக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டுவந்தது. பட்டுக்கோட்டை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. களம் இறங்கியது. இதனால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகமாக தேர்தல் களத்தில் பணிபுரிந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி பெற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட வாய்ப்பு கிடைத்தவுடன் அந்த தொகுதியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளதால் தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்