தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் கடைபிடிக்கப்படும் தமிழக அரசின் தலைமை காஜி!

வானில் பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு நாளை முதல் தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

மேலும், இரவு நேர சிறப்புத் தொழுகை(தராவீஹ்), இஃப்தார் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் வீடுகளில் இருந்தவாறு இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை அமைப்பும், அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளதால் அதனை பின்பற்றி வணக்க வழிபாடுகளை வீடுகளிலேயே செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நோன்பு கடைபிடிக்கப்பட்டது. அதை பின்பற்றி இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கூட இன்று நோன்பு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வானில் பிறைபார்க்கப்பட்டு நாளை ரமலான் மாதத்தின் முதல் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. 


إرسال تعليق

0 تعليقات