போதைப்பொருட்களுடன் பாஜக இளைஞரணிச் செயலாளர் கைது!!

மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி கோகோயினுடன் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் தனது நண்பர் பிரமிர் குமாருடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி கஃபே ஒன்றிற்கு சென்று வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு காரில் இருந்த படியே மோட்டார் சைக்கிளில் வரும் சிலரிடம் போதைப் பொருட்களை பரிமாற்றம் செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.அவென்யூவில் உள்ள கஃபேவிற்கு மாநில பாஜக யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தார். பமீலா உடன் நண்பரும், யுவ மோர்ச்சா நிர்வாகியுமான பிரமிர் குமார்  மற்றும் பமீலாவின் தனிப்பட்ட பாதுகாவலர் ஆகியோர் உடன் சென்றனர். அவர்களை மறித்த காவல்துறையினர் காரை சோதனை செய்தனர். அப்போது பமீலாவின் கைப்பை மற்றும் கார் சீட்டிற்கு அடியில் கோக்கைன் என்ற போதைப்பொருள் இருந்தது. 

இதையடுத்து காவல்துறையினர் பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி மற்றும் அவரது நண்பர் பிரமிர் குமாரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் அவர்களுடன் வேறு யார் ஈடுபட்டுள்ளனர்..? அவர்கள்  போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியா..? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

إرسال تعليق

0 تعليقات