கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததையடுத்து மருத்துவ பரிசோதனையும் தளா்த்தப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபா் மாதத்திலிருந்து வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அந்தந்த நாடுகளில் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து நெகடீவ் சான்றிதழுடன் வந்தால், அவா்களுக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை கிடையாது என்ற விதிமுறையை சுகாதாரத்துறையினா் அமல்படுத்தினா். இதனால் வெளிநாட்டு பயணிகள் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையின்றி, வெளிநாட்டில் எடுத்த மருத்துவ பரிசோதனை சான்றிதழை காட்டிவிட்டு சென்றனா்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. அதைப்போல் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து பயணிகள் கொண்டு வரும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களில் போலி சான்றிதழ்களும் வருவதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இன்று காலையிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும், கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்கா, சிங்கபூா், மலேசியா நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் அந்தந்த நாடுகளில் எடுத்த கொரோனா வைரஸ் மருத்துவ சான்றிதழை காட்டிவிட்டு செல்லலாம்.
அதைத்தவிர மற்ற நாடுகளான துபாய், சாா்ஜா, அபுதாபி, குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தாா், வியட்நாம், இலங்கை, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவா்கள் அந்தந்த நாடுகளில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கட்டாயமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்காக 2 விதமான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,200, ரூ.2,500 என்று நிா்ணயக்கப்பட்டுள்ளது. ரூ.1,200 கட்டண பரிசோதணை செய்தால் முடிவுகள் 6 மணியிலிருந்து 8 மணி நேரத்திற்குள் வரும். ரூ.2,500 கட்டண பரிசோதனை செய்தால் 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் முடிவுகள் கிடைக்கும். இந்த ரிசல்ட் வரும் வரை சுகாதாரத் துறையினா் கண்காணிப்பில் பயணிகள் இருப்பாா்கள். பாசிட்டீவ் ரிசல்ட் வரும் பயணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக சோ்க்கப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.