முட்டைக்கோஸில், தொற்று நோயை எதிர்த்துப் போராடும் சல்ஃபர் அதிக அளவில் இருப்பதால், தினமும் சிறிதளவு முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த வியாதியும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.
இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்து, அதனால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தாதுகள், வைட்டமின்கள் போன்ற எல்லாமே இதில் அடங்கியிருக்கிறதாம். ஒரு கப் சமைக்கப்பட்ட முட்டைக்கோஸில், முப்பத்து மூன்று கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையும் கூடாது.
இந்தக் காயில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைகக் கூடியது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அதனால் ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
கண் பார்வை தெளிவையும், கண்புரை வருவதையும் தவிர்க்கிறது. சிலருக்கு இளம் வயதிலேயே முதுமையின் சாயல் தெரியத்தொடங்கும். தோலில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், தோலின் நிற மாற்றம் ஆகியவைத் தோன்றத் தொடங்கும். அவை உண்டாகாமல் இருக்க முட்டைக்கோஸ் நல்ல ஒரு மருந்தாகும்.
Source from webdunia tamil
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.