கொசுக்கள் மிகவும் சிறியவை, ஆனால் தொல்லைத்தரக்கூடியவை. கொசுக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வசிக்கும் எவரும், அந்த கொசுக்களை வரவிடாமல் தடுக்கும் பயனுள்ள வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.
இத்தகைய கொசுக்களை அழிப்பதற்கு கடைகளில் பல கொசு விரட்டும் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அதிக பணம் செலவழித்து கொசுக்களை வரவிடாமல் தடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டே எளிதில் கொசுக்களை விரட்டலாம். உங்கள் வீட்டிலும் கொசுக்கள் அதிகம் சுற்றினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளின் மூலம் தடுத்திடுங்கள்.
பூண்டு
பூண்டின் நறுமணத்திற்கு கொசுக்கள் அண்டாது. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் சிறிது பூண்டை கொதிக்கும் நீரில் தட்டிப் போட்டு, அந்நீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்திடுங்கள். இதனால் பூண்டு வாசனை வீடு முழுவதும் பரவி, வீட்டிற்குள் கொசுக்களை வரவிடாமல் தடுக்கும்.
துளசி
துளசியின் மணம் கொசுக்களுக்குப் பிடிக்காது. உங்கள் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் துளசி செடி தொட்டியை வைத்து வளர்த்து வந்தால், வீட்டிற்கு கொசுக்களை வரவிடாமல் தடுக்கலாம்.
எலுமிச்சை மற்றும் கிராம்பு
கொசுக்களை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் ஓர் சிறப்பான வழி தான் இது. அதற்கு எலுமிச்சையை இரண்டு பாதியாக வெட்டி, அதில் கிராம்புகளை சொருகி வைத்து, ஒவ்வொரு ஜன்னல் கதவுகளிலும் வைக்க வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருப்பதுடன், கொசுக்கடியில் இருந்தும் விலகி இருக்கலாம்.
வேப்பிலை மற்றும் லாவெண்டர்
வேப்பிலை மற்றும் லாவெண்டர் ஆயில் வேம்பு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் கலந்து, கை, கால்களில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத்திற்கு கொசுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
புதினா
புதினா எண்ணெய் ஒரு கப் நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஆங்காங்கு தெளித்திடுங்கள். இதனால் புதினா எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீடு புத்துணர்ச்சி அளிக்கும் வாசனையுடன் இருக்கும்.
காபி தூள்
காபி தூள் நீர் தேங்கியிருக்கும் பகுதிகள் கொசுக்களுக்கு சிறந்த இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைகின்றன. உங்கள் வீட்டைச் சுற்றி அல்லது கூரையின் மேல் நீர் குட்டைகள் இருந்தால், அங்கு சிறிது காபி தூளை தூவுங்கள். இதனால் கொசு முட்டை அந்நீரில் இருப்பின், அது தானாக மேற்பரப்பில் மிதந்து, ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.