பெட்ரோல் விலை ஏறிபோச்சு.. சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த MLA - தமிமுன் அன்சாரி

வரலாறு காணாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விண்ணைப் பொளக்கிறது. குறிப்பாக ராஜஸ்தானில் பெட்ரோல் விலை 100 தாண்டிச் சென்றுவிட்டது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி சைக்கிளில் வந்தார். வரலாறு காணாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விண்ணைப் பொளக்கிறது. நாட்டின் சில இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடு முழுவதும் ஆங்காங்கே நூதன முறையில் போராட்டம் நடைபெறுகிறது. இதனிடையே இன்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த இரண்டுமுறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது போல், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. சட்டப்பேரவைக்கு சைக்களில் சென்றார். விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சைக்கிளில் பதாகை ஒன்றையும் கட்டியிருந்தார். எம்எல்ஏ ஒருவர் தமிழக சட்டப்பேரவைக்குக் கண்டன பதாகையுடன் சைக்கிளில் வந்ததை, சட்டப்பேரவைக்குச் செல்லும் வழியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். சட்டப்பேரவைக்கு வந்திருந்த ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது தமிமுன் அன்சாரியின் செயல்.

பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டிக்கும் விதமாக சைக்கிளில் வந்த அவர், மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சிஏஏ விவகாரம், பாஜகவுடன் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களால் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறார் தமிமுன் அன்சாரி. இதனால் இந்தச் சட்டப்பேரவையில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

إرسال تعليق

0 تعليقات