முதற்கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் நிறைவு பெற்றது. அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14%, மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளன.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 77 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாமில் 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்கத்தின் ஜர்கிராம், மேற்கு திட்னாபூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் காலை முதல் மாலை வரை வந்து வரிசையாக ஆர்வத்துடன் வாக்களித்தனர் இதேபோல் அசாம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு விறு, விறுவென நடந்தது. மாலை 6 மணிக்கு பதிவு நிறைவு பெற்றது.
இன்று மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 191 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.. அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்தே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். கிருமி நாசினி வழங்கல், உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு பின்னரே வாக்குச்சாவடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கபட்டார்கள்.
வாக்குப்பதிவு இரு மாநிலங்களிலும் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14%, மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு
-----------------------
சமூக நலன் கருதி..

0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.