ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவேராக மாற்ற இலவசமாக 5 ஆடு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 28.8.2021 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது,ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற முப்பத்தி எட்டாயிரம் பெண்களுக்கு எழுபத்தி ஐந்து கோடியே அறுபத்தி மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பயனாளி ஒருவருக்கு தலா ஐந்து செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கப்படும் என்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனித்தா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்நிலையில்,ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் 100% மானியத்தில் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, செம்மறி ஆடுகள்,வெள்ளாடுகள் வழங்கும் இந்த திட்டத்திற்காக ரூ.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.