சென்னை: மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை புரியும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை காரைக்கால் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னையில் கனமழை பெய்து வருவதால் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை புரியும் 8 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை முழுமையாக தெரியாத காரணத்தால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்களும் மற்றும் மதுரை, திருச்சி, மும்பை மற்றும் ஷார்ஜாவில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.