11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.

இதுபோன்று, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நகை, திருவாரூர் மற்றும் தஞ்சையிலும் கனமழை பெய்யும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலது சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்