பெருமகளூர் பேரூராட்சியில் நூறுநாள் வேலை கேட்டு டிச.14 மனு கொடுக்கும் போராட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பேரவைக் கூட்டம் பெருமகளூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 

வி.தொ.ச சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஏ.இளங்கோவன் தலைமை வகித்தார். வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

நிர்வாகிகள் வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச்சாமி, 
நெல்லடிக்காடு சேகர், பழனி, சோனமுத்து உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், "எதிர்வரும் டிச.14 செவ்வாய்க்கிழமை அன்று, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை தலைமையில், நூறுநாள் வேலை, வேலை அடையாள அட்டை கேட்டு, பெருமகளூர் பேரூராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று மனு கொடுப்பது எனவும், அரசின் நலத்திட்டங்களை பெற ஏதுவாக, விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும்,, இ-சேவை மையங்கள் மூலம் விடுபடாமல், வரும் டிச.31 க்குள் இ-ஸ்ராம் அட்டையை பெற வேண்டும் என கேட்டுக் கொள்வது, 
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات