அன்னபூரணியின் வீடியோக்களைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது” - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி
அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திடீர் பெண் சாமியார் அன்னபூரணி. அதேநேரம், சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் தனிப்பட்ட பிரச்சனைக்காக கலந்துகொண்டுள்ளார் அன்னபூரணி. அந்த வீடியோக்களும் ஒருபக்கம் வைரலாகி விமர்சனத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து பிரபல தனியார் தொலைக்காட்சி இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ள இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். “அந்தப் பெண்ணின் வீடியோக்கள் நிறைய வந்திருக்குன்னு நினைக்கிறேன். அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம், மக்கள் ஏமாந்துப் போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாவும் இருக்கு. அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்துப் பேசுவது சரி கிடையாது.
ஆனால், இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது ரொம்ப ரொம்பத் தப்பான விஷயம். முட்டாள்தனமும்கூட. சாமி என்று சொல்வதை மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் நாம் ஏமாற ரெடியாக இருக்கிறோமோ, அதுவரை நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இதில், எந்த சாதி, எந்த மதம் என்றெல்லாம் வேண்டாம். எல்லாவற்றிலும் இருக்கிறார்கள். அதனால், ’நான் கடவுளின் அவதாரம்’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக்கூடாது. சிந்தித்து கண் விழித்துக்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.
மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் வீடியோவும், தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற அக்கவுண்ட்டில் வெளியான வீடியோவையும் வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆத்தா அன்னபூரணி
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) December 26, 2021
😅😅😅😅😅😅 pic.twitter.com/WeU3WHnHgM
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.