சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அமைப்பு

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஏராளமானோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அமைக்கப்பட்டது. 

சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி செம்பருத்தி நகரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.எம். வீரப்பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.வேலுச்சாமி,  பி.பெரியண்ணன், நாகேந்திரன், சேகர், மல்லிப்பட்டினம் கிளைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கிளைக்கூட்டம் நடைபெற்றது. 10 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், கிளைச் செயலாளராக பிரவீன்குமார் தேர்வு செய்யப்பட்டார். 

அங்குள்ள செம்பருத்தி நகரில், மல்லிப்பட்டினம் துறைமுகம் அமைக்கப்படும் போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 45 குடும்பத்தினர், வனத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். வீடு கட்டித்தர வேண்டும். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். குடி தண்ணீர், மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதேபோல் ரெண்டாம்புலிக்காடு ஊராட்சி நெட்டோடை பகுதியில் ஏழு பேர் கலந்து கொண்டனர். முருகையன் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இங்கு, "குளக்கரையில் குடியிருந்து வரும் 30 குடும்பங்களுக்கும் குடியிருக்க மனைப்பட்டா வழங்க வேண்டும். இதர தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். 

தொடர்ந்து மரக்காவலசை ஊராட்சி காரங்குடாவில் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்த்தர் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 'கடைத்தெருவில் உள்ள வடிகால் வாய்க்கால், தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி தரவேண்டும். குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஒரு வீட்டில் கூட கழிப்பறை இல்லாத நிலை உள்ளது. பொதுமக்கள், பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே, அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைத்து தர வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர். 
புதிய கிளை அமைக்கப்பட்ட மூன்று இடங்களிலும் கட்சிக் கொடியேற்றி வைக்கப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்