புதுக்கோட்டையில், துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தை மூடுமாறும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆணை பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு (சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி (வயது 11) என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குண்டு பாய்ந்து காயமடைந்த விவகாரம் குறித்து கீரனூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் புகழேந்திக்கு தேவையான மருத்துவ சிகிச்சை தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கி சூடும் மையம் பாதுகாப்பானதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தை மூடுமாறும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆணை பிறப்பித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.