இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!!

இந்தோனேசியாவின் மௌமர் என்ற இடத்திலிருந்து 95 கி.மீ. வடக்கே 7.6 ரிக்டர் அளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாக்கக் கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் மௌமரேவில் இருந்து 95 கிமீ வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات