சாலை விபத்துகளில் காயமடைபவர்களை காப்பாற்ற ’நம்மை காக்கும் 48- இன்னுயிர் காப்போம் திட்டம்’ செயல்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனையில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு 48 மணிநேரம் இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் இத்திட்டத்திற்கான வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும், இந்த திட்டம் மூலம் விபத்துக்குள்ளானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முதல்கட்ட மருத்துவ செலவு ரூ. 1 லட்சத்தை தமிழக அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், சாலை விபத்துக்களில் சிக்கி காயமடைபவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
தற்போது இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு 48 மணிநேரம், அடையாள அட்டைகள், காவல்துறை வழக்குப்பதிவு நடவடிக்கைகள் என எந்த ஆவணங்களையும் கேட்காமல் முதல்கட்ட சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்தத் திட்டம் 205 மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் 405 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 610 மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.