தஞ்சையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் , முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதல்வர்

தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.98 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து ரூ.894 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 44 ஆயிரம் குடும்பங்கள் பயனடைய ரூ.238 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

தஞ்சாவூர் என்றாலே காவிரி, காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றத்தை அமைக்க முதல் முதலில் வலியுறுத்தியவர் கருணாநிதி. காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம் தி.மு.க. காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்கச் செய்தவரும் கலைஞர் தான். ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு. தஞ்சையை பெருமைபடுத்திய அரசு திமுக அரசு தான்.

கடந்த 2 மாதத்தில் பெறப்பட்ட 48 ஆயிரம் மனுக்களில் 22 ஆயிரம் மனுக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்வு கண்டுள்ளார். 

கொரோனா தாக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்