இந்திய விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தில் காத்திருந்து அதன் பின்னரே வீடுகளுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றாலும் கட்டாயம் ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அடுத்த 8ஆவது நாள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர். மேலும் ஒமைக்ரான் பாதிப்பா என ஆய்வகம் ஆய்வு செய்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆனாலும் இந்த கட்டுப்பாடுகள் போதாது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹை-ரிஸ்க் நாட்டு பயணிகள், இந்தியா வருவதற்கு முன்னரே Airsuvidha என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இது கட்டாயம். அதில் கடந்த 14 நாட்களில் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பயணிகள் டெஸ்ட்டிற்கான கட்டணத்தையும் இணைய தளம் மூலமாகவே கட்டிவிட வேண்டும். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 6 சர்வதேச விமான நிலையங்களில் இந்தக் கட்டுப்பாடு இன்று முதல் அமலாகியுள்ளது. இதன்மூலம் பயணிகள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றார்கள் என்ற முழு விவரங்கள், விமான நிலைய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முன்பாகவே தெரிந்து விடும்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.