பேராவூரணியில் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஜீவா நினைவு தினம்

ஜன.18-- பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர், தோழர் ப.ஜீவானந்தம் 59 ஆவது நினைவு தினம், பேராவூரணி கே.ஓ.பி படிப்பகத்தில், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் பி.ஏ.கருப்பையா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோழர் ஜீவானந்தம் திருவுருவப் படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் டி.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.முத்துக்குமார் கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். ஏஐடியூசி ஒன்றிய பொறுப்பாளர் கே.எஸ்.முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், ஏஐடியூசி ஆர்.மூர்த்தி, வி.தொ.ச சந்தானம், சிபிஐ நகரத் துணைச் செயலாளர் பாபு, 
எஸ்.கே.எம்.காசியார், பாரதி வை. நடராஜன், கே.ராமு, கே.அருணகிரி, மாதர் சங்கம் சி.வெள்ளையம்மாள், இளைஞர் பெருமன்றம் ரெ.நீலகண்டன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

நிறைவாக, விவசாயச் தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் வி.ராஜமாணிக்கம், "ஜீவாவின் அரசியல் வாழ்க்கை மற்றும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள்" பற்றி விளக்கிப் பேசினார்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات