கடந்த 7ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், வடக்கில் இருந்து ஒரு இண்டிகோ விமானமும், தெற்கில் இருந்து ஒரு இண்டிகோ விமானமும் ஒரே நேரத்தில் புறப்பட்டிருக்கிறது. விமான நிலைய அறிவுறுத்தலில் புறப்பாடு ஏற்பாடுகள் நடந்திருக்கிறது. இது விமானத்தில் இருந்த பைலட்டுக்குத் தெரியாது. பெங்களூருவில் இருந்து கொல்கத்தா செல்ல பயணிகளுடன் இண்டிகோ 6இ -455 என்ற விமானம் தயாராக இருந்தது. அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர் செல்ல 6E-246 என்ற விமானமும் தயாராக இருந்தது. பெங்களூரு விமான நிலையத்தின் ஓடு பாதைகளில் வடக்கில் பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானங்கள் இருக்கும். தெற்கு ஓடு பாதையில் தரையிறங்கும் விமானங்களுக்காக ஒதுக்கப்படும்.
ஆனால், சம்பவம் நடந்த 7ம் தேதி அதிகாலை, பெங்களூரு விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதையிலேயே விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் விதமாக மாற்றப்பட்டது. தெற்கு ஓடுபாதை பராமரிப்புக்காக அப்போது மூடப்பட்டது. இந்தத் தகவல் தெற்கு ரன்வே டவரில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. கொல்கத்தா செல்லும் விமானம் தெற்கு ரன்வேயில் தயாராக இருந்தது. ரன்வே மூடப்பட்ட விஷயம் தெரிவிக்கப்படாததால், இந்த விமானம் பறப்பதற்கான அனுமதியை தெற்கு டவர் அதிகாரிகள் பைலட்டுக்கு கொடுத்தனர். இதையடுத்து பைலட் விமானத்தை இயக்கத் தொடங்கினார்.
அதேசமயம், பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர் செல்ல வடக்கு ரன்வேயில் இண்டிகோ விமானம் பயணிகளுடன் தயாராக இருந்தது. இதற்கு வடக்கு ரன்வே டவர் கண்ட்ரோல் அதிகாரிகள் பறப்பதற்கான அனுமதியைக் கொடுத்தார்கள். இதையடுத்து ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களும் பறப்பதற்குத் தயாராகி ரன்வேயில் வந்து கொண்டிருந்தன.
அதிகாரிகள் செய்த குளறுபடியால் வடக்கில் இருந்து ஒரு விமானமும் தெற்கில் இருந்து ஒரு விமானமும் விமான நிலைய ரன்வேயின் மத்திக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமான நிலைய ரேடார் குழு அதிகாரிகள் இரண்டு விமானமும் நேருக்கு நேர் வருவதை கவனித்து சுதாரித்துக் கொண்டனர். உடனடியாக ரேடார் குழு, இரண்டு விமானங்களின் பைலட்டுகளுக்கும் இதை அவசரமாகத் தெரியப்படுத்தினர்.
நேருக்கு நேராக மோத இருந்த விமானம், பைலட் மற்றும் ரேடார் கண்ட்ரோல் டீம் சமயோஜிதத்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் எங்கும் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகவில்லை என்றும் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியாவும் இதை வெளியிடவில்லை இந்த விவகாரம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் கேட்டதற்கு இண்டிகோ மற்றும் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. டிஜிசிஏ தலைவர் அருண் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.