இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா அதிவேகமாக பரவும் - WHO எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 58,097 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 534 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்  இந்தியாவில் இதுவரை  4,82,551 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கொரோனாவால் 2,14,004  பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த சில  வாரங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில்  தற்போது தொற்று எண்ணிக்கை  மீண்டும் உயர தொடங்கிவிட்டது.

இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் செளமியா சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலக முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை மிக மோசமாக வீச தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات