ஜனவரி 23 -ல் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…!

ஜனவரி 23-இல் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே தான் காணப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது மாநில அரசுகள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات