சர்வதேச விமான சேவை: பிப்ரவரி 28ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு!

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை மத்திய அரசு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வரை  நீடித்துள்ளது.

தற்போது உலகில் உள்ள பல நாடுகளும் சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. ஏனென்றால் ஒமைக்ரான் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு வைரஸ்களும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மீண்டும் வேகமாக பரவுகிறது. அதிலும் குறிப்பாக இரண்டு முறை இந்திய அரசாங்கம் ஆபத்திற்குரிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது. 

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 28 ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமான சேவைக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات