இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சவூதி அரசுகள் எடுக்கும் முடிவுக்கு உள்பட்டு இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மும்பையில் ஹஜ் பயணிகளுடன் பயிற்சியாளர்களாக செல்பவர்களுக்கான 2 நாள் தேசிய பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர் , ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்பவர்களின் சுகாதார நலத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்றார் .
இந்தியா மற்றும் சவுதி அரேபிய அரசுகள் எடுக்கும் முடிவுக்கு உட்பட்டு இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹஜ் பயணத்தின் முழுவிவரங்கள் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இவர்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.