கொட்டும் மழையிலும் 4 கிலோமீட்டர் நடந்து சென்று ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்திய வங்கி மேலாளார்

சென்னையில் நேற்று முன்தினம் சாலையில் பல கிலோமீட்டர் தூரம் வரை நீடித்த கடுமையான வாகன நெரிசலில் சிக்கித்தவித்த 3 ஆம்புலன்ஸ்களுக்கு , 4 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்று வழி ஏற்படுத்தி தந்த தனியார் வங்கி மேலாளரின் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பணி முடித்து விட்டு வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தனியார் வங்கி மேலாளர் ஜின்னா அண்ணாசாலையில் சென்ற போது ஆம்புலன்ஸ்கள் மற்ற வாகனங்களின் நடுவே சிக்கிக்கொண்டிருந்ததை பார்த்தார். அப்போது உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு கொட்டும் மழையில் ராஜீவ்காந்தி மருத்துவமனை வரை கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வாகனங்களை விலக்கிவிட்டு  ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தந்துள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சுயநலம் பாராமல் செயல்பட்ட ஜின்னாவை பாராட்டி , அவர் உதவிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
(Source from polimer news) 



-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات