ஜன.08-- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் , பேராவூரணி கிளை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து, கொரோனா பேரிடர் கால ரத்ததான முகாமை, சனிக்கிழமை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடத்தினர்.
இந்த, ரத்ததான முகாமிற்கு, டிஎன்டிஜே மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்டப் பொருளாளர் முடவை அசரப் அலி, மாவட்ட துணை தலைவர் அப்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் சத்திரம் பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேராவூரணி அரசு தலைமை மருத்துவர் பாஸ்கர், ஜமால் மருத்துவமனை மருத்துவர் முஹமது நூருல் அப்ரார், பாலா மருத்துவமனை மருத்துவர் பாலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் 60 யூனிட் ரத்தம் தஞ்சை அரசு மருத்துவமனை டாக்டர் ஜெர்லின் மற்றும் ரத்த வங்கி ஆலோசகர் புனிதாவிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளைத் தலைவர் முகமது கனி, பொருளாளர் அல்லாஹ் பிச்சை, கிளை மருத்துவர் அணி ஷபியுல்லாஹ் செய்து இருந்தனர். முடச்சிக்காடு, செந்தலை கிளை நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.