தமிழகம் முழுவதும் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்…!

நாளை தமிழகம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களை கடந்தவர்களுக்கு முன் எச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ள  நிலையில் நாளை தமிழகம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات