கன மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலனஸ்கள் செல்ல வழிவகை செய்த வங்கி மேலாளரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி கனமழையின் போது சென்னை அண்ணா சாலையில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற முகமதுஅலி ஜின்னா என்பவர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னால் இருந்த வாகனங்களை சிறிது சிறிதாக நகரச் செய்து அவர் கொட்டும் மழையிலும் 4 கிலோமீட்டர் நடந்தே சென்று ஆம்புலன்களுக்கு போக்குவரத்து நெரிசலிலும் பாதை ஏற்படுத்திக் கொடுத்தர்.
ஆம்புலன்களுக்கு போக்குவரத்து நெரிசலிலும் பாதை ஏற்படுத்திக் கொடுத்த தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றும் முகமதுஅலி ஜின்னாவை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டி வெகுமதி அளித்தார். மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதிகள் வழங்கி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.