சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக Live ஒளிபரப்பு.. சொன்னதை செய்தார்- ஸ்டாலின்..

தமிழக கவர்னர் சட்டசபையில் உரையாற்றியது, அரசு கேபிள், 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களில், நேற்று நேரடியாக ஒளிபரப்பானது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளன இன்று காலை கூட்டம் கூடியவுடன், கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.. காரணம், தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்போது, அதன் நிகழ்வுகளையும் விவாதங்களையும் அரசு நேரடியாக ஒளிபரப்பு செய்வதில்லை..

இதனால் சட்டசபையில் தங்கள் தொகுதி தலைவர்கள், உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மக்களால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.. இதை தெரிந்து கொள்ளும் உரிமையும் மக்களுக்கு உள்ளதால், நிகழ்வுகள் அனைத்தையும் எடிட் செய்யாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறோம் என்று தேர்தல் வாக்குறுதியாகவே திமுக அளித்தது.. அதன்படியே ஆட்சியும் அமைந்தது.

இந்த முறையும் கலைவாணர் அரங்கிலேயே சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. தான் சொன்னதை நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இன்று முதல்முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது...



சட்டப்பேரவை நிகழ்வுகள் @TNDIPRNEWS செய்தி துறையின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலும் நேரலை செய்யப்படுகிறது... மேலும் அரசு கேபிள் டிவி சேனலிலும் நேரலை செய்யப்படுகிறது. இதன்மூலம் மற்றொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையும் இன்றைய தினம் நிறைவேறி உள்ளது..!

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات