தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 15 முதல் 18 வயது உடையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை சைதாப்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாவட்டங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/ கோவின் (COWIN) இணையதளத்தில் நேற்று முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 33 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பொருளாதாரம் மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா மிரட்ட தொடங்கி இருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கிறது. ஒமைக்ரானை தடுப்பதற்கான கேடயம் முகக்கவசம் தான்.
உயிர்காக்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் படி உங்கள் வீட்டு பிள்ளையாக கெஞ்சி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி போடுவதை இயக்கமாகவே அரசு மாற்றி உள்ளது. தடுப்பூசி போடுபவர்களின் இறப்பு விகிதம் மிகக் குறைவு. தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு புதிய வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபடுவோம். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வரும் காலத்தில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரை பெற வேண்டும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடியுங்கள், இவ்வாறு அவர் பேசினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.