சர்வதேச விமானப் போக்குவரத்து தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் - விமானப் போக்குவரத்துத் துறை

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் விமானங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

விமானப் போக்குவரத்துக்கான தடை இன்றுடன்(பிப்.28) முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேநேரம், மத்திய அரசின் அனுமதியுடன் அங்கீகரிக்கப்பட்ட சில விமான சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات