"மனிதநேயம்" சிறுவன் கலாமுக்கு வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...

மனிதநேயம், ஒற்றுமை குறித்து பேசிய சிறுவன் அப்துல் கலாமுக்கு அரசு வீடு வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் தான் அப்துல் கலாம். 7-ம் வகுப்பு படிக்கிறான்.. ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டான்... திமுக எம்பி கனிமொழி உட்பட ஏராளமானோர் சிறுவன் தந்த பேட்டிக்கு பாராட்டை தெரிவித்தனர்.

யாரையும் பிடிக்காதுன்னு முதல்ல சொல்லாதீங்க, என்னையும் எல்லாரும் பல்லன்னு தான் கூப்டுவாங்க... நான் ஏன் எல்லாரையும் பிடிக்காதுன்னு சொல்லனும்?.. எல்லாரும் நண்பர்கள் மாறி தான். ஒற்றுமை இல்லாத நாடு எதுக்கு இருக்கனும்.. நம்ம நாடு ஒற்றுமையான நாடுனு சொல்றோம், ஒற்றுமை இல்லாம இருந்தா எப்படி? சாதி மத கலவரம் நமக்கு எதுக்கு.. அதெல்லாம் இங்கே தேவையில்லை.. எல்லாருமே இந்தியர்கள்.. எல்லாரும் ஒரே மாதிரிதான்.. எல்லாருக்கும் ரத்தம் கலரு ஒன்னுதான்.. நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் சாதி மதம்ன்னு சொல்லி தந்துட்டாங்க.. அதனாலதான் சாதி பத்தி இப்போ வரைக்கும் பேசிட்டு இருக்கோம்' என்று தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தவன்.

இந்நிலையில், அப்துல்லின் அம்மா கண்ணீர் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், 'இந்த பையன் பேட்டி தந்து 2 நாள்தான் ஆகுது.. அவனா மனசில பட்டதை பேசினான்.. வேணும்னே பேசல.. அதுக்கே இவ்வளவு அழுத்தம் தர்றாங்க.. நாங்க வீடு இல்லாமல் இங்கே வந்திருக்கோம்.. யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல.. எங்களை வீடு காலி பண்ண சொல்றாங்க ஹவுஸ் ஓனர்.. நாங்கள் எப்படி வெளியே போவோம்.. வேணாங்க நீங்க உடனே காலி பண்ணுங்கன்னு சொல்றாங்க.. மனித நேயம் என்பது இங்கேயே செத்து போச்சு' என்று கதறி அழுதார்.

இந்த வீடியோவும் வைரலானநிலையில் பல யூட்யூப் சேனல்களும் அந்தச் சிறுவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து பேட்டியெடுத்தனர். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அப்துல் கலாம் சிறுவனையும், அவனது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது, ‘தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். ஊடகத்தில் பேட்டி அளித்ததால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி கூறியுள்ளார். எனவே, அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும்’ என மாணவன் அப்துல் கலாம் வைத்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடு ஒதுக்க அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று மாணவன் அப்துல் கலாம் மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து பேசினார். அப்போது, அவர்களுக்கு எந்த பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டறிந்து துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு வீடு ஒதுக்கீட்டு ஆணையை தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டார். அப்போது, யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்த வேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் அப்துல் கலாமை பாராட்டி அவருக்கு ‘பெரியார் இன்றும் என்றும்’ என்ற நூலை பரிசாக வழங்கினார். இதையடுத்து, இவர்களுக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணை இன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات