வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும், அவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்டு, 7 நாட்கள் தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அவசியமில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை என்றும் விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்வது கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருவதால் தடுப்பூசியினை முழு அளவில் செலுத்தி கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் கட்டாயம் இல்லை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.