செந்தலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் , செந்தலைப்பட்டினம் கிளை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை இணைந்து, நடத்தும் இரத்ததான முகாம் 26/02/2022 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்தலைப்பட்டினம் கடைத்தெருவில் இந்த உயிர் காக்கும் இரத்ததான முகாம் நடைபெற இருக்கின்றது. 

மேலும் விபரங்களுக்கு TNTJ செந்தலை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்....

குறிப்பு.
* இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 55 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.

* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

* எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, இருதய நோய்கள், காசநோய் போன்ற பெரு வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். 

* இரத்த தானம் செய்யும் நான்கு மணி நேரத்திற்குள் நல்ல உணவு உட்கொண்டிருக்க வேண்டும்.

* ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات