தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா, ஆதனூர் கிராமத்தில் அன்னை வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினர் வழங்கிய அன்னதான நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.
ஆதனூர் கிராமத்தில் வாழும் மக்கள், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு, கிராமத்திலிருந்து தவக்காலத்தின் நாலாவது வாரத்தில் நடந்து சென்று, நேத்திக்கடன் செய்து வழிபடுவதை கடந்த 56 ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் குழுவாக இணைந்து, அன்னை வேளாங்கண்ணி பாதயாத்திரை குழு எனும் பெயரில் வருடம்தோறும் மிகப்பெரிய அன்னதானம் நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் அன்னை, 87 வது ஆண்டாக, பாதையாத்திரை குழுவினரின் தலைவராக அந்தோனிதாஸ், துணைத்தலைவராக தாமஸ், பொருளாளராக டிசோன் பிரபு, செயலாளராக வில்சன் அலெக்சாண்டர் மற்றும் துணைச் செயலாளராக செல்வஸ்டார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது ஒருங்கினைப்பின்படி, இந்த ஆண்டு அன்னதான நிகழ்வு நடைபெற்றது.
ஆதனூர் பங்குதந்தை லூர்துசாமி யின் ஆசீர்வாதத்தோடு, பாதையாத்திரை குழுவின் கௌரவத் தலைவர் ஓய்வுபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் இருதயராஜ் தலைமை வகிக்க, அருட்சகோதரிகள் பிலோமினா, ராபர்ட் கிளாரா, ஜெஸி லிட்டில் ரோஸ், ஆர்சி சபை செயலர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, ஆர்சி சபை பொருளாளர் பாலன் மற்றும் கவுன்சிலர் பீ காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகிக்க, அன்னதானத்திற்கு பொருளுதவி செய்தோருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, இறையாசீர் பெற்றுச் சென்றனர். இந்நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள், கிராம பொது மக்களும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி : முனைவர்
வேத கரம்சந்த் காந்தி - செய்தியாளர்
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.