ஸ்பெஷல் எண்ட்ரி - Ar. ரகுமான் ஸ்டூடியோவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இசையமைப்பில் வெளியாகவுள்ள மூப்பில்லா தமிழே... தாயே என்ற ஆல்பத்தை போட்டுக் காட்டினார்.

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் அமைக்கபட்டுள்ள அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அங்கு சென்றுள்ளார். தமிழக முதலமைச்சராக அவர் பதவியேற்ற பிறகு அவர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாகும். உலக அளவில் 192 நாடுகள் பங்கேற்கும்  துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி,  விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டிற்குமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதுமே இந்த பயணத்தின் நோக்கம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை துபாயில் ஐக்கிர அரபு அமீரக வர்த்தகம் மற்றும் பொருளாதார துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளார் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சரை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்து தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற அங்கு சென்ற முதலமைச்சருக்கு, தான் இசையமைக்கும் மூப்பில்லா தமிழே... தாயே என்ற ஆல்பத்தை ஏ.ஆர்.ரகுமான் போட்டுக் காட்டினார்.



-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات