தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலையில் கிராம ஊராட்சியும் செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கமும் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி நடக்கவிருக்கிறது..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வித சிகிச்சை, மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், ஈசிஜி இரத்தத்தின் அளவு கண்டறிதல், இரத்தத்தின் வகைகள் கண்டறிதல், கண் பரிசோதனை, சர்க்கரை நோய் சிகிச்சை, இதய சம்பந்தப்பட்ட நோய் என அனைத்து விதமான சிகிச்சைகளும் நடைபெற இருக்கின்றது. இந்த பொது மருத்துவ முகாமில் ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொள்கின்றனர்.
எனவே உள்ளூர் ஊர் மக்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு செந்தலை வயல் ஊராட்சி மற்றும் பொதுநல சங்கம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து வகை பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும்.....
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.